தற்போதைய செய்திகள்

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தீ

4th Feb 2020 09:26 AM

ADVERTISEMENT


சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமானது சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. இந்த ஆலை சென்னையில் உள்ள மணலி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது மெட்ராஸ் ரிபைனரீஸ் லிமிடெட் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. 1965ஆம் வருடம் இந்திய அரசு அமோகோ என்ற அமெரிக்க எண்ணெய் நிறுவனம் மற்றும் ஈரானிய எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றின் உதவி கொண்டு இந்த ஆலையை நிறுவியது. இந்த ஆலையில் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சமையல் எரி வாயு, நாப்தா, மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், உயவு எண்ணெய், மெழுகு மற்றும் தார் ஆகிய பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. .

நவரத்தின மதிப்பை பெற்ற இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனத்தில் இன்று செவ்வாய்கிழமை (பிப்.4) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். 

ADVERTISEMENT

கச்சா எண்ணெய் செல்லும் வால்வில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT