தற்போதைய செய்திகள்

மத்திய பட்ஜெட்: ஜல் ஜீவன் திட்டத்திற்கு ரூ.11,500 கோடி ஒதுக்கீடு

1st Feb 2020 04:03 PM

ADVERTISEMENT

புது தில்லி: 2020-21 ஆம் ஆண்டிற்கான ஜல் ஜீவன் திட்டத்துக்காக ரூ.11,500 கோடி ஒதுக்கீடு செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மக்களவையில் இன்று சனிக்கிழமை (பிப்.1) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-2020க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

மத்திய பட்ஜெட்டில் ஜல் ஜீவன் திட்டத்திற்கு ரூ.3.6 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அனைத்து வீடுகளுக்கும் குழாய் நீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையிலிருந்து ஜல் ஜீவன் திட்டத்தத்தை அறிவித்ததாக மத்திய பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் போது நிர்மலா சீதாராமன் கூறினார்.

ADVERTISEMENT

மத்திய பட்ஜெட்டில் ஜல் ஜீவன் திட்டத்திற்காக ரூ.3.6 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 2020-21 ஆம் ஆண்டிற்கு ரூ.11,500 கோடி ஒதுக்கீடு செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று கூறினார்.

இத்திட்டம் உள்ளூர் நீர் ஆதாரங்களை அதிகரிப்பதற்கும், தற்போதுள்ள ஆதாரங்களை மேம்படுத்துவதற்கும், நீர் சேகரிப்பு மற்றும் உமிழ்நீரை ஊக்குவிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.

மேலும், நடப்பு ஆண்டிலேயே ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் இந்த நோக்கத்தை பூர்த்தி செய்வதற்கு ஊக்குவிக்கப்படும் என்று கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT