பனாஜி: கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக சீனாவில் இருந்து கோவா வந்த 2 ஐரோப்பியர்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.
சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதல் வேகமாகப் பரவி வரும் நிலையில் இந்தியாவில் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க விமான நிலையங்களில் வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், சீனாவில் இருந்து கோவா வந்த 2 ஐரோப்பியர்களை பரிசோதனை செய்ததில் அவா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் 2 பேரையும் கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சனிக்கிழமை தங்க வைக்கப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்குமாறும், சில தினங்களுக்கு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.