தற்போதைய செய்திகள்

வீட்டு கடன்களுக்கான வட்டி வரிச் சலுகை ஓராண்டுக்கு நீட்டிப்பு

1st Feb 2020 08:53 PM

ADVERTISEMENTபுது தில்லி: குறைந்த விலை வீட்டு கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி மீது ரூ.1.5 லட்சம் வரி சலுகையைப் பெறுவதற்கான காலவரம்பு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சனிக்கிழமை தனது 2வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  

அதில், குறைந்த விலை வீட்டு கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி மீது ரூ.1.5 லட்சம் வரி சலுகையைப் பெறுவதற்கான காலவரம்பு வரும் 2021 ஆம் ஆண்டு மாா்ச் வரையில் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் மீதான தற்போது 30 சதவீதமாக உள்ள வரி விகிதத்தை 22 சதவீதமாக குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT