புதுதில்லி: வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கான காப்பீட்டை ரூபாய் 1 லட்சத்தில் இருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சனிக்கிழமை தனது 2-வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையின் முக்கிய அறிவிப்பாக, வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கான காப்பீட்டை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, எந்தவொரு வங்கியிலும் டெபாசிட் செய்தவர்களுக்கு அசல் மற்றும் வட்டித் தொகையை திரும்பி அளிக்க தவறும் பட்சத்தில் அவர்களுக்கான அதிகபட்ச காப்பீடாக அசல் மற்றும் வட்டியை சேர்த்து ரூ.1 லட்சம் வரை இருந்தது.