தற்போதைய செய்திகள்

மத்திய பட்ஜெட்டில் தெளிவான அறிவிப்புகள் இல்லை: சிவசேனா அதிருப்தி

1st Feb 2020 06:37 PM

ADVERTISEMENT


புதுதில்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட்டில் தெளிவான அறிவிப்புகள் இல்லை என சிவசேனா கட்சியின் செய்திதொடர்பாளர் மணிஷா கயாண்டே கூறியுள்ளார். 

மத்திய பட்ஜெட் குறித்து சிவசேனா கட்சியின் செய்திதொடர்பாளர் மணிஷா கயாண்டே செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில் தெளிவான அறிப்போ, விஷயங்களோ இல்லை.  வரிவிலக்கு பெறுவோரின் விளக்கம் இல்லை. எல்ஐசி அல்லது மருத்துவக்காப்பீடு பெற்றிருந்தால் அவர் வரிச்சலுகை பெறுவதற்கு தகுதியானவரா என்ற தெளிவு இல்லை. வரிச்சலுகை பெறுவதற்காகவே இதுபோன்ற விஷங்களில் முதலீடு செய்யும் மக்களுக்கு ஏமாற்றமே. எல்ஐசி மீது கவனத்தை திருப்பியுள்ள மத்திய அரசு, ஏர் இந்தியா போன்ற அரசு நிறுவனங்களை மூடுவது வருத்தம் அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT