தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கரோனா வைரஸ் தாக்குதல் இல்லை: அமைச்சர் சி. விஜயபாஸ்கர்

1st Feb 2020 10:32 PM

ADVERTISEMENT

 


புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் கரோனா வைரஸ் தாக்குதல் இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி

கரோனா வைரஸ் தாக்குதல் குறித்து மக்களிடமும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் சுகாதாரத் துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரப்படுகிறது.

ADVERTISEMENT

சீனாவில் இருந்து இதுவரையில் 394 பேர் தமிழகம் வந்து உள்ளனர். விமான நிலையத்திலேயே அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகும், அவர்களின் தொலைபேசி எண்களை வாங்கி வைத்துக் கொண்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

சென்னை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா பாதிப்பு என்று பரவிய தகவல் முற்றிலும் வதந்தியே, 

சீனாவில் இருந்து வரும் அனைவருக்கும் கரோனா வைரஸ் தாக்குதல் இருக்கும் என்ற அச்சம் வேண்டாம். அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறது.

மத்திய அரசும் போதிய ஆலோசனைகளை வழங்கி வருகிறது. உலக சுகாதாரா நிறுவனத்தோடு தொடர்பில் இருக்கிறோம். அவர்களும் உரிய ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். மக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார் விஜயபாஸ்கர். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT