தற்போதைய செய்திகள்

உ.பி. பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர் வகுப்பறையில் சுட்டுக்கொலை

31st Dec 2020 03:28 PM

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், 14வயது மாணவன் சக மாணவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பில் இரு மாணவர்களுக்கு இடையே உட்காரும் இடத்திற்காக புதன்கிழமை பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதில் கோபமடைந்த ஒரு மாணவன், வீட்டிலிருந்து துப்பாக்கியை கொண்டுவந்து தன்னுடன் சண்டையிட்ட சக மாணவனை வியாழக்கிழமை சுட்டுக் கொன்றுள்ளார்.

இதுகுறித்து புலந்த்ஷாஹர் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார் சிங் கூறியதாவது,

ADVERTISEMENT

உட்காரும் இடத்திற்காக இரு மாணவர்களும் புதன்கிழமை சண்டை போட்டுள்ளனர். அதில் ஒரு மாணவன், ராணுவத்தில் வேலை செய்யும் அவரது மாமாவின் வீட்டிற்குச் சென்று அவரின் துப்பாக்கியை எடுத்து வந்துள்ளான். 

பின், வியாழக்கிழமை காலை அவனுடன் சண்டையிட்ட சக மாணவனை மூன்று முறை சுட்டுள்ளான். இதில், சுடப்பட்ட மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, சுட்ட மாணவனை கைது செய்து, அவனின் பையை சோதனை செய்ததில் மற்றொரு நாட்டு துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.

அந்த மாணவனை காவல்துறை காவலில் வைத்து விசாரித்து வருகின்றோன் எனக் கூறினார்.

 

Tags : uttar pradesh
ADVERTISEMENT
ADVERTISEMENT