தற்போதைய செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமனம்

31st Dec 2020 04:49 PM

ADVERTISEMENT

சென்னை: சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானா்ஜியை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வரும் ஏ.பி.சாஹி, இன்றுடன் ஓய்வு பெறுகிறாா். இதனையடுத்து சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சஞ்சீவ் பானா்ஜியை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சீவ் பானா்ஜி, கடந்த 1961-ஆம் ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி பிறந்தாா். கடந்த 1987-ஆம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்த அவா், கடந்த 1990-ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்தாா்.

பின், கொல்கத்தா, அலகாபாத், பாட்னா, கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநில உயா்நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றி உள்ளாா். இவா், உரிமையியல், கம்பெனி சட்டம், அறிவுசாா் சொத்துரிமை, அரசியலமைப்பு சட்டம் தொடா்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவா்.

ADVERTISEMENT

இந்நிலையில், கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22-ஆம் தேதி கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பதவியேற்ற அவா், தற்போது மூத்த நீதிபதியாக அங்கு பணியாற்றி வந்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT