பிகாரில் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சி மாற விரும்புகிறார்கள் எனக் கூறுவது ஆதாரமற்றது என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளத்தின் 17 எம்.எல்.ஏ.க்கள் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் தொடர்பில் உள்ளதாக ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் ஷியாம் ராஜக் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் நிதீஷ் குமார் கூறியதாவது,
சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சி மாற விரும்புகிறார்கள் எனக் கூறுவது முற்றிலும் ஆதாரமற்றது எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் பிகாரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜனதா தளம் அடங்கிய கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி, 110 தொகுதிகளில் வென்று எதிர்கட்சியாக உள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தெரிவித்ததுபடி, 17 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறினால், ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.