நாகலாந்து மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் பதற்றமானவை என பிரகடனம் செய்த மத்திய உள்துறை அமைச்சகம், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை 6 மாதத்திற்கு அமல்படுத்தியது.
இந்தச் சட்டம் அமலில் உள்ள இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்படும். சந்தேகப்படும் நபர்களை கைது செய்யவும், விசாரணை நடத்தவும், சோதனை நடத்தவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.