தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? கமல்ஹாசன்

18th Dec 2020 06:55 PM

ADVERTISEMENT

நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? என கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின் போது, கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் ஊரிலுள்ள ஒரு குடும்பம்கூட நன்றாக இருக்காது எனக் கூறியிருந்தார். 

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கின்றது எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை கமல்ஹாசன் வெளியிட்ட சுட்டுரையில்,

ADVERTISEMENT

“நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித் துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

Tags : KAMALHAASAN
ADVERTISEMENT
ADVERTISEMENT