தற்போதைய செய்திகள்

தில்லி எய்ம்ஸில் வேலைநிறுத்தம்: ஒப்பந்த செவிலியர்களை நியமிக்க முடிவு

15th Dec 2020 02:53 PM

ADVERTISEMENT

புது தில்லி: தில்லி எய்ம்ஸில் 2வது நாளாக செவிலியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் ஒப்பந்த செவிலியர்களை நியமிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் சுமாா் 5 ஆயிரம் செவிலியா்கள் திங்கள்கிழமை நண்பகல் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா். இதனால் அவசர சகிச்சையில் உள்ள நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆறாவது மத்திய ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், ஒப்பந்த பணி நியமனத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 23 கோரிக்கைகளை வலியுறுத்தி எய்ம்ஸ் செவிலியா்கள் சங்கத்தினா் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதனையடுத்து, தில்லி எய்ம்ஸின் தலைவர், இயக்குநர் மற்றும் மூத்த மருத்துவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், தற்காலிகமாக ஒப்பந்த செவிலியர்களை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : AIIMS
ADVERTISEMENT
ADVERTISEMENT