தற்போதைய செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டதால் பணி வழங்க மறுப்பு: தீக்குளிக்க முயன்ற ஒப்பந்த தூய்மைப் பணியாளர்

14th Dec 2020 06:33 PM

ADVERTISEMENT

அரியலூர்: போராட்டத்தில் ஈடுபட்டதால், தற்போது பணி வழங்க மறுக்கப்பட்டுள்ளது எனக் கூறி ஒப்பந்த தூய்மை பணியாளர் அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு திங்கள்கிழமை தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.

அரியலூர் நகராட்சியில், ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக இருபாலரும் என 200க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இவர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பணத்தை வழங்கக்கோரி அரியலூர் பெரியத்தெருவை சேர்ந்த மீனாட்சி (35) உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கடந்த 30-ம் தேதி நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, நகராட்சி சார்பில் ஏழு நாட்களுக்குள் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை பணியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அன்றிலிருந்து ஆண்கள் செய்யும் வேலையினை தனக்கு ஒதுக்கி தந்ததாகவும், இது குறித்து கேட்டதால், கடந்த ஒருவாரமாக வேலை வழங்கவில்லை எனவும் கூறி நகராட்சி அலுவலகம் முன்பு மீனாட்சி தனது உடலில் மண்ணெண்ணைய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

ADVERTISEMENT

இதனை கண்ட நகராட்சி அலுவலர்கள் மற்றும் காவலர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர். தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

 

Tags : ARIYALUR
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT