தற்போதைய செய்திகள்

சேவூர் அருகே தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு: சட்டப் பேரவைத் தலைவரிடம் மனு

14th Dec 2020 04:07 PM

ADVERTISEMENT

அவிநாசி: சேவூர் அருகே 846 ஏக்கரில் தொழில் பூங்கா (சிப்காட்) அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபாலிடம் திங்கள்கிழமை மாலை மனு அளித்தனர்.

சேவூர் அருகே தத்தனூர் ஊராட்சிப் பகுதியில் 846 ஏக்கரில் தொழில் பூங்கா அமைப்பதற்கு ஆரம்பகட்ட நடவடிக்கைகள் கடந்த வாரம் மேற்கொண்டனர். இதையடுத்து, தொழில் பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தத்தனூர், புலிப்பார், புஞ்சை தாமரைக்குளம் உள்பட அருகாமை ஊராட்சிகளைச் சேர்ந்த பொது மக்கள் சட்டப் பேரவைத் தலைவரும், அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினருமான ப.தனபாலிடம் மனு அளிக்க வந்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட சட்டப் பேரவைத் தலைவர் ப. தனபால் கூறியது:

பொதுமக்களுக்கு இடையூறான திட்டங்கள் 99.9 சதவீதம் செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம். மக்களின் கோரிக்கை
குறித்து சட்டப் பேரவையில் எடுத்துரைக்கப்படும் எனக் கூறினார்.

ADVERTISEMENT

Tags : Tiruppur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT