தற்போதைய செய்திகள்

நாக்பூரில் பள்ளிகள் திறப்பு

14th Dec 2020 09:45 PM

ADVERTISEMENT

கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு நாக்பூரில் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின், படிப்படியாக தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.

இருப்பினும், மாநில அரசுகள் பள்ளிகளைத் திறப்பதில் சிறிது தயக்கம் காட்டி வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூர் மாவட்ட கிராமப்புறத்தில் உள்ள பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

நாக்பூர் மாவட்டத்தில் மொத்தமாக திறக்கப்பட்ட 646 பள்ளிகளில், 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் 16,198 பேரும், 4,772 ஆசிரியர்கள் மற்றும் 2,506 பள்ளி ஊழியர்கள் முதல் நாளில் பள்ளிக்கு வந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : school reopen
ADVERTISEMENT
ADVERTISEMENT