தற்போதைய செய்திகள்

தில்லி - கொல்கத்தா தினசரி விமான சேவைக்கு அனுமதி: மேற்குவங்க அரசு

14th Dec 2020 07:18 PM

ADVERTISEMENT

தில்லியிலிருந்து கொல்கத்தாவிற்கு இயக்கப்படும் தினசரி விமான சேவைகளுக்கு மேற்குவங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. பின், படிப்படியாக மத்திய அரசுத் தரப்பில் விமான சேவைகள் இயங்கத் தொடங்கியது.

இருப்பினும், குறிப்பிட்ட மாநிலங்களில் கரோனா பரவல் அதிகமாக இருந்ததால் மேற்கு வங்க அரசு சில மாநிலங்களிலிருந்து விமானங்களை இயக்க கட்டுபாடுகள் விதித்திருந்தது.

இந்நிலையில், தில்லி - கொல்கத்தா தினசரி விமான சேவைகளைத் தொடர திங்கள்கிழமை மேற்குவங்க அரசு அனுமதி அளித்துள்ளது. 

ADVERTISEMENT

Tags : flight
ADVERTISEMENT
ADVERTISEMENT