தற்போதைய செய்திகள்

தில்லியில் 6 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

10th Dec 2020 08:59 PM

ADVERTISEMENT

தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 1,575 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 1,575 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,01,150 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 61 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 9,874 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இன்று தொற்றில் இருந்து 3,307 பேர் குணமடைந்துள்ளதால் மொத்தம் 5,72,523 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 18,753 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT