தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத்தை கூட்டக்கோரி பஞ்சாப் எம்.பி.க்கள் தில்லியில் போராட்டம்

7th Dec 2020 03:53 PM

ADVERTISEMENT

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை உடனடியாக கூட்டக்கோரி பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.பி.க்கள் தில்லி ஜந்தர்மந்தரில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.

இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு உடனடியாக நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை கூட்டக்கோரி பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT