தற்போதைய செய்திகள்

நிவர் புயல்: விழுப்புரத்தில் ஆய்வு செய்த மத்திய குழு

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் பாதிப்புகளை மத்தியக் குழுவினர் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 25 தேதி ஏற்பட்ட நிவர் புயல் கன மழையால், பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அரசின் இணைச்செயலர் அசு தோஷ் அக்னிகோத்ரி தலைமையிலான மத்தியக்குழு திங்கள் கிழமை மாலை ஆய்வு செய்தது.

இக்குழுவில் மத்திய வேளாண்துறை இயக்குநர் மனோகரன், மீன்வளத்துறை ஆணையர் பால்பாண்டியன், நெடுஞ்சாலை போக்குவரத்துத்துறை மண்டல அலுவலர் ரணஞ்சய் சிங் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர்.
கண்டமங்கலம் வட்டாரம் களிஞ்சிகுப்பத்ல் வாழைத் தோப்புகள் உள்ளிட்ட தோட்டப் பயிர்களும்,  வீராணம் கிராமத்தில் மலட்டாறு ஆற்றங்கரையில் பாதிக்கப்பட்ட பயிர்கள், சொரப்பூர் கிராமத்தில் நெற்பயிர் பப்பாளி ஆகிய பயிர்களை பார்வையிட்டனர்.

இவர்களுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா, திட்ட இயக்குனர் மகேந்திரன், தோட்டக்கலை துறை கூடுதல் ஆணையர் பெரியசாமி, துணை இயக்குனர் இந்திரா, வேளாண் இணை இயக்குனர் ராஜசேகர், கோட்டாட்சியர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT