தற்போதைய செய்திகள்

சென்னை புறநகர் ரயில் சேவை: டிச.7 முதல் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

4th Dec 2020 06:36 PM

ADVERTISEMENT

சென்னை புறநகர் ரயில் சேவையின் ரயில் எண்ணிக்கை டிசம்பர் 7 முதல் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை புறநகர் ரயில் சேவை கடந்த மாதம் அத்தியாவசிய பணியாளர்களும், பெண்களும் பயணிக்க மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில், தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,

சென்னை புறநகர் ரயில் சேவையின் ரயில் எண்ணிக்கை டிசம்பர் 7ஆம் தேதி முதல் 244ல் இருந்து 320ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

மேலும், அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பெண்கள் தவிர மற்ற பெண்கள் காலை 7.00 - 9.30 மணி வரையும், மாலை 4.30 - 7.00 மணி வரையும் பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது.  

Tags : Chennai suburban train
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT