தற்போதைய செய்திகள்

திருவனந்தபுரம் விமான நிலையம் நாளை மூடல்

3rd Dec 2020 07:45 PM

ADVERTISEMENT

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவனந்தபுரம் விமான நிலையம் நாளை மூடப்படுவதாக திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் நவ்ஜோத் கோசா தெரிவித்துள்ளார்.

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த புரெவி புயல் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவுக்கு மேல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே தமிழக கடற்கரையை புரெவி புயல் கடந்து நாளை கேரள பகுதிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, திருவனந்தபுரம் மாவட்டம் உள்பட சில மாவட்டங்களுக்கு வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Tags : burevi cyclone
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT