புரெவி புயல் பாதிப்புகள் குறித்து தகவல் அளிக்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த புரெவி புயல், குமரிக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவுக்கு மேல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே தமிழக கடற்கரையை புரெவி புயல் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்தியில்,
தூத்துக்குடி மாவட்ட மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். கடல் கரைகள், நீர் நிலைகள் அருகில் மக்கள் யாரும் செல்ல வேண்டாம். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.
மேலும், புயல் பாதிப்புகள் குறித்து தகவலளிக்க 1077, 0461-2340101, 94864 54714 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.