தற்போதைய செய்திகள்

கேரளத்தில் 697 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்: முதல்வர்

ANI

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளத்தில் 697 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் இன்று இரவு இலங்கையில் கரையைக் கடந்து டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை குமரி - பாம்பன் இடையே கரையைக் கடந்து கேரள மாநிலத்திற்குள் நகர உள்ளது.

இதையடுத்து கேரளத்திலும் புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட செய்தியில்,

“புயல் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் 175 குடும்பங்களைச் சேர்ந்த 697 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அடையாளம் காணப்பட்டு வருகின்றோம்.

புயல் பாதிப்பை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 8 குழுக்கள் கேரளத்திற்கு வந்துள்ளனர். விமானப்படை மற்றும் கப்பல்படை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தயார் நிலையில் உள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT