தற்போதைய செய்திகள்

பாம்பன் பாலம் வழியே ரயில் சேவை ரத்து

1st Dec 2020 08:19 PM

ADVERTISEMENT

புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதால் பாம்பன் பாலம் வழியே ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கன்னியாகுமரியில் இருந்து கிழக்கே 930 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது, இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என்றும், டிசம்பர் 3ம் தேதி காலை குமரிக்கடல் பகுதிக்கு வரும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில், பாம்பன் கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது.

இதனையடுத்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில்,

ADVERTISEMENT

காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் ராமேசுவரத்தில் இருந்து கிளம்பும் சேது ரயில் மண்டபத்தில் இருந்து கிளம்பும், சென்னையில் இருந்து செல்லும் சேது ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags : Rameswaram
ADVERTISEMENT
ADVERTISEMENT