தற்போதைய செய்திகள்

‘புரெவி’ புயல் உருவானது

DIN

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'புரெவி' புயலாக செவ்வாய்க்கிழமை உருவானது.

வங்கக் கடலில் நேற்று நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 900 கி.மீ தொலைவில் நிலைகொண்டது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை புயலாக வலுப்பெற்று, இலங்கையின் திருக்கோணமலை அருகே 400 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகரும் புயல் நாளை மாலை இலங்கையை கடந்து மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதியில் நிலை கொள்ளும்.

பின், டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை பாம்பன் - குமரி அருகே தென்கிழக்கு கடற்கரையில் கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

SCROLL FOR NEXT