தற்போதைய செய்திகள்

கேரளத்தில் மேலும் 5,375 பேருக்கு கரோனா

1st Dec 2020 09:22 PM

ADVERTISEMENT

கேரளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,375 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 5,375 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 6,08,358 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 2,270 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இன்று ஒரே நாளில் 6,151 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 5,44,864 ஆக உள்ளது. தற்போது 61,092 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்தார்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT