தற்போதைய செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் பள்ளிகள் தொடங்கின

30th Aug 2020 04:56 PM

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள் கடந்த 6 மாதத்திற்கு பிறகு நாடு முழுவதும் இன்று திறக்கப்பட்டுள்ளது.

நாடு 10 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் இன்றைய வகுப்பறை ஒரு புதிய அனுபவமாக அமைந்துள்ளது.

வீட்டில் இருந்து இணைய வகுப்புகளில் பயில அனுமதி வழங்குவது, பள்ளிகளில் வெப்ப பரிசோதனை, வகுப்பறைகளில் சமூக இடைவெளி என பள்ளிகளில் காண்பது அவர்களுக்கு இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது கூறுகையில்,

ADVERTISEMENT

அமீரகாத்தில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு தரமான பாதுகாப்பான கல்வியைத் தர விரும்புகின்றோம். குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான கல்விச் சூழலை உறுதி செய்வது பள்ளிகள் மற்றும் பெற்றோர்களின் கூட்டுப் பொறுப்பாகும் என கூறினார்.

Tags : UAE
ADVERTISEMENT
ADVERTISEMENT