தற்போதைய செய்திகள்

ராஜஸ்தானில் புதிதாக 603 பேருக்கு கரோனா

30th Aug 2020 03:41 PM

ADVERTISEMENT

ராஜஸ்தானில் இன்று புதிதாக 603 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 603 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 79,380 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 1,037 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இன்று ஒரே நாளில் 642 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் 63,613 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 14,730 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT