தற்போதைய செய்திகள்

அருள்மிகு வெள்ளியம்பலநாதர் கோவிலில் ஆவணி மாத பிரதோச வழிபாடு

30th Aug 2020 07:49 PM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை: அருள்மிகு வெள்ளியம்பலநாதர் திருக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை ஆவணி மாத சிறப்புப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. 

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் பாறைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு வெள்ளியம்பல நாதர் திருக்கோவில். திருச்சுழி வட்டத்தில் அமைந்துள்ள அஷ்டலிங்கங்களில் ஒன்றானதும், அபூர்வமாக மேற்குத்திசை நோக்கி அமைந்த சிறப்புப் பெற்றது இத்திருக்கோவில்.

மேலும், திருச்சுழி வட்டாரத்திலேயே ஒரே பாறையில் செதுக்கப்பட்ட தனிச்சிறப்புமிக்க குடைவரைக் கோவிலும் இதுவாகும். இக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஆவணி மாத சிறப்புப் பிரதோச வழிபாட்டில் அருள்மிகு நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் முதலில் நடைபெற்றன.

பின்னர் அருள்மிகு வெள்ளியம்பலநாதருக்கு சந்தனம், இளநீர், கஸ்தூரி மஞ்சள், தேன், பால், விபூதி, குங்குமம், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும்  நடைபெற்றன.

ADVERTISEMENT

மேலும் அருள்மிகு வெள்ளியம்பலநாதருக்கு 1008 ருத்ராட்ச அபிúஸகம் செய்து, ருத்ராட்ச அலங்காரத்தில் நமச்சிவாயர் காட்சி தந்தார். அதனையடுத்து முழு அலங்காரத்தில் அருள்மிகு வெள்ளியம்பலநாதர் காட்சியளித்தார்.

முழுஊரடங்கு காரணமாக  இந்நிகழ்ச்சியானது பதிவு செய்யப்பட்ட காணொளி மூலம் பக்தர்களுக்கு அனுப்பப்பட்டு அதன் மூலம் பக்தர்கள் பிரதோச வழிபாட்டு தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவிலின் பூசாரியும் சிவனடியாருமான  ராஜபாண்டி செய்திருந்தார்.

Tags : virudhunagar
ADVERTISEMENT
ADVERTISEMENT