தற்போதைய செய்திகள்

தில்லியில் சந்தைகள் மேலும் 7 நாள்கள் திறக்க அனுமதி

30th Aug 2020 07:10 PM

ADVERTISEMENT

தில்லியில் வாராந்திர சந்தைகள் செப்டம்பர் 6 வரை சோதனை முயற்சியில் திறந்திருக்க அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக வாராந்திர சந்தைகள் மார்ச் 23 அன்று தில்லியில் மூடப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 24 - 30 வரை 7 நாள்களுக்கு சோதனை முயற்சியில் சந்தைகள் திறக்கப்பட்டது.

அந்த 7 நாள் சோதனை முயற்சி இன்று முடிவடைவதையொட்டி, மேலும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை திறந்திருக்க அனுமதி வழங்கியுள்ளது.

வாராந்திர சந்தைகள் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன, மேலும் 2 வாடிக்கையாளர்கள் மட்டுமே ஒரு கடைக்குள் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.
 

ADVERTISEMENT

Tags : Delhi
ADVERTISEMENT
ADVERTISEMENT