தற்போதைய செய்திகள்

கர்நாடகத்தின் பா.ஜ.க. தலைவருக்கு கரோனா 

30th Aug 2020 09:37 PM

ADVERTISEMENT

கர்நாடகத்தின் பாஜக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நலின் குமார் கட்டீலுக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட செய்தியில்,

எனக்கு கரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

உங்களின் வாழ்த்துக்கள் மற்றும் ஆசிர்வாதத்தால் விரைவில் குணமடைந்து வருவேன். மேலும், என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கவனமாக இருங்கள் என கூறினார்.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT