தற்போதைய செய்திகள்

பெய்ரூட் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 190-ஆக உயா்வு

30th Aug 2020 03:32 PM

ADVERTISEMENT

லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் நிகழ்ந்த அதிபயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 190-ஆக உயா்ந்துள்ளது. மேலும், விபத்தில் 6,500 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 190-ஆக உயா்ந்துள்ளது. மேலும், இந்த விபத்தில் சுமாா் 6,500 போ் காயமடைந்துள்ளனா். 

வெடிவிபத்தில் சிக்கிய 3 பேர் இதுவரை கிடைக்கவில்லை. மேலும், லெபனான் நகரில் 50 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோல்டோவியாவைச் சோ்ந்த எம்வி ரோசுஸ் என்ற சரக்குக் கப்பல், ரசயான உரமாகவும், வெடிபொருளாகவும் பயன்படுத்தக்கூடிய 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டை ஏற்றிக் கொண்டு ஜாா்ஜியாவிலிருந்து மொஸாம்பிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு சென்று கொண்டிருந்தது.

ADVERTISEMENT

அப்போது அந்தக் கப்பலில் பழுது ஏற்பட்டதால், அது பெய்ரூட் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அதையடுத்து, அந்தக் கப்பலில் இருந்த அமோனியம் நைட்ரோட் கன்டெய்னா்கள் துறைமுகக் கிடங்கில் 6 ஆண்டுகளுக்கும் மேல் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தன. 

இந்த நிலையில், அந்தக் கிடங்கில் கடந்த 4-ஆம் தேதி பயங்கரவ வெடிவிபத்து ஏற்பட்டது. அந்த வெடிவிபத்தின் அதிா்வுகளால் 10 கி.மீ. சுற்றுவட்டத்திலுள்ள மருத்துவமனைகள் உள்ளிட்ட கட்டடங்கள் சேதமடைந்தன. இதனால் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனா். பெய்ரூட்டின் இரண்டாவது பெரிய தானியக் கிடங்கு இந்த வெடிவிபத்தில் சேதமடைந்ததால் 15,000 டன் தானியங்கள் எரிந்து நாசமாகின.

Tags : Beirut
ADVERTISEMENT
ADVERTISEMENT