தற்போதைய செய்திகள்

செப் 9-ல் கூடும் மேற்கு வங்க சட்டப் பேரவை

26th Aug 2020 02:32 PM

ADVERTISEMENT

மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டம் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் என்று சபைத் தலைவர் பிமான் பானர்ஜி புதன்கிழமை அறிவித்தார்.

சட்டபேரவைக் கூட்டத்தொடர் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும். அமர்வின் காலம் மற்றும் சபையின் வணிகம் குறித்த முடிவுகள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் என்று சபைத் தலைவர் பானர்ஜி அறிவித்தார்.

மேலும், கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி சட்டப்பேரவை அமர்வுகள் நடைபெறும் எனக் கூறினார்.

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில்,

ADVERTISEMENT

இந்த வார தொடக்கத்தில், மாநில அரசு செப்டம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் சட்டப் பேரவைக் கூட்டத்தை கூட்ட சபைத் தலைவரிடம் தெரிவித்தோம்.

விதிமுறைகளின்படி, இரண்டு அமர்வுகளுக்கு இடையில் ஆறு மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்க முடியாது. மேற்கு வங்கத்தில், கடைசி அமர்வு இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்தது. எனவே செப்டம்பர் மாதத்திற்குள் அடுத்த அமர்வை நடத்த வேண்டும். பெரும்பாலும் இது ஒரு குறுகிய அமர்வாக இருக்கும் என கூறினார்.

மேற்கு வங்கத்தில் 295 உறுப்பினர்களைக் கொண்ட சட்டபேரவை உள்ளது. இதில் ஆங்கிலோ-இந்திய சமூகத்திலிருந்து பரிந்துரைக்கப்பட்ட ஒரு உறுப்பினரும் உள்ளார்.

Tags : west bengal
ADVERTISEMENT
ADVERTISEMENT