தற்போதைய செய்திகள்

திண்டுக்கல்: தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு

26th Aug 2020 05:42 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் : சோதனையில் ஈடுபட்ட கன்னிவாடி காவல் நிலைய தலைமைக் காவலரை இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வெட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி காவல் நிலையம் முன்பு காவலர்கள் புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி காவலர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில்,  ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலைமை காவலர் திருப்பதி என்பவரை தாக்கியுள்ளார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

பலத்த காயமடைந்த தலைமைக் காவலர் திருப்பதி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதனிடையே மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : dindugul
ADVERTISEMENT
ADVERTISEMENT