தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் தொற்று பாதிப்பு 58,41,428; பலி 1,80,174 -ஆக உயர்வு

23rd Aug 2020 09:29 AM

ADVERTISEMENT


வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,829 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 58 லட்சத்து 41 ஆயிரத்து 428 ஆக உயர்ந்துள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக வல்லரசு நாடான அமெரிக்கா உள்ளது. இங்கு நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். 

உலக நாடுகள் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. முதலில் தொற்று பரவிய ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா போன்ற நாடுகளில் தொற்று பரவல் வேகமாக உள்ளது. 

இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, மேலும் புதிதாக 43,829 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 58,41,428 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், அதே கால அளவில் 974 உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,80,174 கோடியைக் கடந்தது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 31,48,080 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

அதிகமான தொற்று பாதிக்கப்பட்ட மாகாணமாக கலிபோர்னியா உள்ளது. அங்கு இதுவரை 6,64,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 12,134 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக, டெக்சாஸில் 6,00,968 பேரும், புளோரிடாவில் 5,97,597 பேரும், நியுயார்க்கில் 459,797 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Tags : Coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT