தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் புதிதாக 412 பேருக்கு கரோனா: மேலும் 8 பேர் பலி 

23rd Aug 2020 02:31 PM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் புதிதாக 412 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 8 பேர் உயிரிந்துள்ளனர்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல் :
புதுச்சேரியில் 1,282 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 402 பேர், காரைக்காலில் 2 பேர், ஏனாமில் 8 பேரும் என மொத்தம் 412 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,522 ஆக உயர்ந்துள்ளது.

இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,609 ஆக உள்ளது. வீடுகளில் 2,097 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் புதுச்சேரியில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே 350 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 6,657 ஆக உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT