தற்போதைய செய்திகள்

ரவுடி சங்கர் என்கவுன்டர்: காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் விளக்கம்

21st Aug 2020 12:58 PM

ADVERTISEMENT


சென்னை: ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொலை, கஞ்சா வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சங்கர் கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து வெள்ளிக்கிழமை காலை (ஆக 21) 6,30 மணியளவில் அயனவாரம் காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான காவலர்கள் ரவுடி சங்கரை பிடிக்க முயன்றபோது, காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியுள்ளார், ஆய்வாளர் நடராஜன் ரவுடி சங்கரை எச்சரித்துள்ளார். ஆனால் ரவுடி கேட்காமல் வெட்டியாயதால் ஆய்வாளர் நடராஜ் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில், ரவுடி மீது 3 குண்டுகள் பாய்ந்துள்ளது. குண்டு காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். காவலர் முபராக் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுகுறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற உள்ளதால் அது குறித்து மேலும் பேசுவது சரியாக இருக்காது என்றார். 

ADVERTISEMENT

மேலும் ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 50 வழக்குகள் உள்ளது. 5 பிடிவாரண்டுகளும் உள்ளது. அவர் மீது 9 முறை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ரவுடிகள் சிலர் மீது  குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ரவுடிகள் விரைவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறினார். 

Tags : Rowdy Shankar Encounter
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT