தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் படகு உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து

21st Aug 2020 11:54 AM

ADVERTISEMENT

புதுச்சேரி : புதுச்சேரி தெங்கைத்திட்டில் இன்று அதிகாலை படகு உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

தெங்கைத்திட்டு பகுதியில் சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் படகு உற்பத்தி தொழிற்சாலை நடத்தி வந்தார். இங்கு 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் 5 மணிநேரத்திற்கு மேல் போராடி தீயணை அணைத்தனர்.  தீ விபத்து ஏற்படும் போது உள்ளே தொழிலாளர்கள் இல்லாத்தால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

இந்த விபத்தின் மொத்த இழப்புகள் குறித்து கணக்கீடப்பட்டு வருகின்றது. மேலும் தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. 

ADVERTISEMENT

Tags : puduchery
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT