தற்போதைய செய்திகள்

நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 74.28 சதவீதமாக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை

21st Aug 2020 03:15 PM

ADVERTISEMENT

 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 62,282 பேர் குணமடைந்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் அதிகயளவில் குணமடைந்துள்ளதாகவும், குணமடைந்தோரின் விகிதம் 74.28 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனாவில் இருந்து 21,58,946  போ் குணமடைந்துள்ளனா். இது மொத்த பாதிப்பில் 74.28 சதவீதமாக உள்ளது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 983 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 54,849-ஆக அதிகரித்துவிட்டது. எனினும், குணமடைந்தோருக்கும் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோருக்கான இடைவெளி 14,66,918 ஆக உள்ளது. குணமடைந்து வருவோரின் சதவீதம் சீரான அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது."

ADVERTISEMENT

மேலும், இப்போதைய சூழலில் 6,92,028 போ் சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 23.82 சதவீதமாகும்.

ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை 3,34,67,237 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,05,985 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இப்போதைய சூழ்நிலையில் கரோனா பரிசோதனையை அதிகரிப்பதுதான் தொற்று பரவலைத் தடுப்பதற்கான முக்கிய வழிமுறையாகும். ஏனெனில், தொற்று உள்ளவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுவதன் மூலம், அவர்களால் மற்றவர்களுக்கும் தொற்று பரவுவது தடுக்கப்படுகிறது.

தொடக்கத்தில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டபோது, அதில் நோய்த்தொற்று உறுதியாவோர் விகிதமும் அதிகம் இருந்தது. ஆனால், இப்போது நோய்த்தொற்று உறுதியாகும் விகிதம் குறைந்துள்ளது.

மருத்துவமனைகளில் மேம்பட்ட மற்றும் பயனுள்ள மருத்துவ சிகிச்சையில் அதி கவனம் செலுத்துதல்,  தொழில்நுட்ப வழிகாட்டுதலின் மூலம் கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை போன்றவற்றின் மூலம் நாட்டில்  இறப்பு விகிதம் 1.89 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் கரோனா பரிசோதனை மையங்களின் செயல்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 1504 கரோனா சோதனை ஆய்வகங்கள் உள்ளன, இதில் அரசுத் துறையில் 978 மற்றும் 526 தனியார் ஆய்வகங்கள் உள்ளன. 

பாதிப்பு: 29,05,824 
பலி: 54,849
குணமடைந்தோர்: 21,58,947
சிகிச்சை பெற்று வருவோா்: 6,92,028

Tags : COVID 19 recovery
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT