தற்போதைய செய்திகள்

துருக்கியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு -அதிபர் அறிவிப்பு

21st Aug 2020 06:59 PM

ADVERTISEMENT

துருக்கியின் கருங்கடலில் பெரிய அளவில் இயற்கை எரிவாயு இருப்பதாக அதிபர் எர்டோகன் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இதுகுறித்து அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் வெளியிட்ட செய்தியில், துருக்கி கருங்கடலில் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

துருக்கியின் துளையிடும் கப்பலான பாத்திஹ், சுமார் 3200 கோடி கன மீட்டர் இயற்கை எரிவாயுவைக் கண்டுபிடித்துள்ளது.

இந்த இயற்கை எரிவாயுவை 2023-ம் ஆண்டு பொது பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்டுள்ளோம் என கூறினார்.

ADVERTISEMENT

Tags : turkey
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT