தற்போதைய செய்திகள்

மதுரையில் இருந்து தில்லிக்கு நேரடி விமான சேவை

21st Aug 2020 12:18 PM

ADVERTISEMENTமதுரை விமான நிலையத்திலிருந்து புதுதில்லிக்கு நேரடி விமான சேவை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.

மதுரை விமான நிலையத்திலிருந்து ஏற்கெனவே புதுதில்லிக்கு விமான சேவை இருந்தது அந்த விமானங்கள் மதுரையிலிருந்து புறப்பட்டு சென்னை வழியாக புதுதில்லிக்கும், மற்றொரு விமானம் மும்பை வழியாக புதுதில்லி சென்றன.

இந்நிலையில், திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாள்களில் தனியார் விமானம் ஒன்று மதுரையில் இருந்து நேரடியாக புதுதில்லிக்கு சேவையை தொடங்கியுள்ளது. இதனால் பயண நேரம் மூன்றே முக்கால் மணி நேரம் ) வெகுவாக குறைகிறது.

இந்த விமானம் புதுதில்லியிலிருந்து காலை 11. 15 மணி அளவில் புறப்பட்டு 2:30 மணியளவில் மதுரை வந்தடையும். அதே விமானம் பிற்பகல் 3.15 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு 6.30 மணிக்கு புது தில்லி சென்று அடையும் என தனியார் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT

Tags : flight
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT