தற்போதைய செய்திகள்

ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு கரோனா

21st Aug 2020 05:11 PM

ADVERTISEMENT

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனுக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் கூறியதாவது, கடந்த வியாழக்கிழமை எடுக்கப்பட்ட பரிசோதனையில் கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

30 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு இருந்தால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டும். எனக்கு 25 சதவீதம்தான் உள்ளது.  இதனால் எனது வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டேன்.

இன்னும் 10 நாள்களுக்கு தனிமைப்படுத்திக்கொண்டு, அதன்பிறகு பரிசோதனை செய்து கொள்வேன். இப்போது உணவு முறைகளை மாற்றி சிகிச்சையை தொடர்ந்து வருகிறேன் என்றார்.  

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT