தற்போதைய செய்திகள்

இந்தோனேசியாவில் தொடரும் நிலநடுக்கம்

21st Aug 2020 12:28 PM

ADVERTISEMENT

இந்தோனேசியாவில் கடந்த புதன்கிழமை சக்தி வாய்ந்த இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை காலை மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுகையில்,

கிழக்கு இந்தோனேசியாவில் 6.9 அலகுகள் அளவிலான நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்டது.

பண்டா கடலில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து தெற்கே உள்ள குபாங் நகரின் மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்தனர். அப்பகுதியில் கட்டிடங்களும் தெருவிளக்குகளும் அதிர்ந்ததில் மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே வந்தனர். 

ADVERTISEMENT

சுலவேசி தீவில் கட்டாபுவிலிருந்து தெற்கே 220 கிலோமீட்டர் தொலைவில், 600 கிலோ மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில், கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் புவியியல் மையத்தால் வெளியிடப்படவில்லை மற்றும் உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதங்கள் பற்றிய தகவல் தெரியவில்லை.

கடந்த புதன்கிழமை, இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த 6.8 அலகு மற்றும் 6.9 அலகு ஆகிய இரண்டு நிலநடுக்கங்கள் தாக்கியது குறிப்பிடத்தக்கது. 

Tags : Earthquake Indonesia
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT