தற்போதைய செய்திகள்

சோமாலியாவில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்கக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

21st Aug 2020 02:08 PM

ADVERTISEMENT

 

மதுரை: சோமாலியா நாட்டில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்கக் கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனு,  அதில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த சித்திரவேல், சேரன், விஸ்வநாதன், மணிமாறன், முத்துகிருஷ்ணன், பிரபு, மற்றும் சிவகங்கையை சேர்ந்த சண்முகம் நாகப்பட்டினத்தை சேர்ந்த சுரேஷ் ஆகிய 8 பேரும் சோமாலியா நாட்டிற்கு மீன்பிடி தொழிலாளர்களாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக சென்றனர். அங்கு வேலை பார்த்த நிலையில், கரோனா காரணமாக தற்போது வேலையும் வழங்கப்படவில்லை. அது மட்டுமின்றி ஊதியம், உணவும் வழங்கபடாததால், அவர்கள் உணவிற்கு வழியின்றி தவித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள், பாரத் திட்டத்தின் மூலமாக தமிழகத்திற்கு அழைத்து உத்திரவிடவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ண வள்ளி அமர்வு முன்ப விசாரணைக்கு வந்தது . வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தர விட்டு  விசாரணையை செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT