தற்போதைய செய்திகள்

ஜார்கண்டில் மேலும் 517 பேருக்கு தொற்று: பலி 286 ஆக உயர்வு 

21st Aug 2020 11:03 AM

ADVERTISEMENT


ராஞ்சி: ஜார்க்கண்டில் மேலும் புதிதாக 517 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 26,938 ஆக உயர்ந்துள்ளது. இதே கால அளவில் தொற்று பாதித்த 8 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனாா தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை 29 லட்சத்தைக் கடந்துள்ளது, அதே நேரத்தில் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 9,18,470 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 68,898 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் மொத்த தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 29,05,824 ஆக உயர்ந்துள்ளன, அதே கால அளவில் 977 பேர் உயிரிழந்துள்ளனர், இதைடுத்து பலி எண்ணிக்கை 54,849 ஆக அதிகரித்துள்ளது. 
தொற்று பாதிப்புக்கு 6,92,028 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 21,58,947 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில், ஜார்க்கண்டில் மேலும் புதிதாக 517 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 26,938 ஆக உயர்ந்துள்ளது. இதே கால அளவில் தொற்று பாதித்த 8 பேர் உயிரிழந்துள்ளனர், இதனால் மாநிலத்தில் உயிழந்தோரின் எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 17,320 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT