தற்போதைய செய்திகள்

மணல் கடத்தலை தடுத்த வட்டாட்சியரை முற்றுகையிட்ட கடத்தல்காரர்கள்

21st Aug 2020 12:25 PM

ADVERTISEMENT

ஆம்பூர்: ஆம்பூர் அருகே மணல் கடத்தலை தடுத்த வட்டாட்சியரை கடத்தல்காரர்கள் வியாழக்கிழமை இரவு முற்றுகையிட்டனர். காவலர்கள் அங்கு சென்று அவரை மீட்டனர்.

ஆலாங்குப்பம் பாலாற்றில் மணல் கடத்தப்படுவதாக  கிடைத்த ரகசிய தகவலை அடுத்து ஆம்பூர் வட்டாட்சியர் சி. பத்மநாபன் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு சென்றுள்ளார். தனியாக சென்ற அவரை மணல் கடத்தல்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். அதனால் சற்று நேரம் அசாதாரண சூழ்நிலை நிலவியுள்ளது.

உடனடியாக அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காவல்துறையினரை கண்டதும் மணல் கடத்தல்காரர்கள் தப்பியோடி விட்டனர்.

மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகள், ஒரு டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT