தற்போதைய செய்திகள்

கொடநாடு காவலாளி கொலை வழக்கு: கோவை மத்திய சிறையிலுள்ள 2 பேர் மட்டும் ஆஜர்

21st Aug 2020 02:26 PM

ADVERTISEMENT

 

கொடநாடு காவலாளி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களில் 10 பேரில் இன்று வெள்ளிக்கிழமை கோவை மத்திய சிறையிலுள்ள சயான், வாளையார் மனோஜ் 2 பேர் மட்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொடநாடு காவலாளி கொலை கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் இன்று கோவை மத்திய சிறையிலுள்ள சயான், வாளையார் மனோஜ், இரண்டு பேர் மட்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்...

கடந்த ஏப்ரல் 2017 ஆம் ஆண்டு 24 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கொடநாடு பங்களாவில் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 12 பேரில் இருவர் இறந்த நிலையில் மீதமுள்ள சயான், வாளையார் மனோஜ், ஜித்தின்ஜாய், திபு, பிஜுன் குட்டி, மனோஜ், சதீசன், உதயகுமார், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி 10 பேரும் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது வரை இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜர் ஆகாத நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பத்து பேரில் கோவை மத்திய சிறையில் உள்ள சயான் வாளையார், மனோஜ் ஆகிய இருவர் மட்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்பு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

விசாரணைக்கு ஆஜராகாத 8 பேருக்கு பிணையில் வராத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT