ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் நெடுஞ்சாலையில் ராம்பன் மாவட்டம் அருகே பல இடங்களில் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 270 கி.மீ நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலை பல பாகுதிகளை இணைக்கும் முக்கியமான சாலையாகும். தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் த்ரிஷுல் மோர், பேட்டரி செஷ்மா மற்றும் பாண்டியல் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் நெடுஞ்சாலையின் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கின்றன. இந்தப் பகுதிகளில் இயந்திரங்களைக் கொண்டு நெடுஞ்சாலைத்துறையினர் சரி செய்து வருகிறோம் எனக் கூறினார்.
ராம்பன் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கடந்த வாரம் இரண்டு நாள்கள் நெடுஞ்சாலை முழுவதும் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.