தற்போதைய செய்திகள்

வாழப்பாடி அருகே சுகாதார பணியாளர்களுக்கு நினைவுப் பரிசு

20th Aug 2020 05:58 PM

ADVERTISEMENT

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு, வாழப்பாடி அரிமா சங்கம் மற்றும் சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் நிறுவனம் சார்பில், பாராட்டு சான்றிதழ், நினைவு பரிசுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. 

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், ஆரம்பத்திலிருந்தே கரோனா   நோய்த்தொற்று அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த, வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம் தலைமையிலான பேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு முன்கள பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

வாழப்பாடி துளி இயக்கம், நெஸ்ட் அறக்கட்டளை, பசுமை அறக்கட்டளை, கருணைகரங்கள் இயக்க தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு, நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் கபசுர குடிநீர், ஹோமியோ மாத்திரைகள், உணவுப்பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

வாழப்பாடி பகுதியில் கரோனா நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்த அர்ப்பணிப்பு உணர்வோடு,  பணியாற்றிவரும் அரசு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி, வாழப்பாடி அரிமா சங்கம் மற்றும் சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை சார்பில்  நற்சான்றிதழ், கேடயம் மற்றும் நினைவு பரிசுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த விழாவிற்கு, அரிமா சங்க தலைவர் முனைவர் சா.ஜவஹர் தலைமை வகித்தார். செயலானர் பெ.பெரியார் மன்னன் வரவேற்றார். பொருளாளர் பி.கே.பன்னீர்செல்வன்,  சேவை திட்ட தலைவர் பிரபாகரன், ரத்ததான குழு தலைவர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராம்கோ சிமெண்ட் நிறுவன பொது மேலாளர் லட்சுமணன், வாழப்பாடி அரிமா சங்க பட்டயத் தலைவர் சந்திரசேகரன், அரிமா அறக்கட்டளை நிறுவனர் தேவராஜன், ராம்கோ பணியாளர் துறை அலுவலர்கள் மணிவேல், முனியசாமி, அன்னை அரிமா சங்க செயலாளர் சுதாபிரபு ஆகியோர், வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம் உள்ளிட்ட மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்கள், மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினர். நிறைவாக,பேளூர் அரசு மருத்துவர் திவ்யபாரதி நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT